இந்தியாவில் தூள் கிளப்பி வரும் அமெரிக்க நிறுவனம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் சமீபத்திய காலமாக வெளி நாட்டு உணவுகள் மீதான மோகம் என்பது அதிகரித்து வருகின்றது.

அதற்கு உதாரணமே இந்த பதிவு. கடந்த ஜூன் 11, 2022ல் முடிவடைந்த 12 வாரங்களுகளில் இந்திய வணிகத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ தெரிவித்துள்ளது.

ஸ்னாக்ஸ் விற்பனையில் ரூ.1.4 கோடி வருமானம்.. 48 வயதில் அசத்தும் கீதா.. வயது எப்போதும் தடையில்லை..!

2வது காலாண்டில் வளர்ச்சி

2வது காலாண்டில் வளர்ச்சி

இதன் இந்திய வணிகம் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் இதன் வணிகம் இரண்டாவது காலாண்டில் 15% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

மெக்ஸிகோ, சீனா, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் எங்களின் வணிகம் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இது வளர்ந்து வரும் சந்தைகளிலும் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

இரட்டை இலக்கில் வளர்ச்சி

இரட்டை இலக்கில் வளர்ச்சி

எனினும் வியட்னாமில் ஒற்றை இலக்கில் வளர்ச்சியினை கண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே AMESA பகுதியில் வசதியான உணவுகள் அலகு அளவு 10% வளர்ச்சியினை கண்டுள்ளது. எப்படியிருப்பினும் முதல் காலாண்டில் இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது.

மோசமான பாதிப்பு
 

மோசமான பாதிப்பு

கொரோனா லாக்டவுன் காலத்தில் இரண்டு தொடர்ச்சியான கோடைகாலங்களுக்கு பிறகு, அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு திரும்பும் நுகர்வோருடன் கடுமையான கோடைகாலத்தை இந்தியா அறிவித்தது. இதன் காரணமாக அதன் வணிகம் மோசமாக பாதித்தது.

லேஸ் சிப்ஸ் மற்றும் பெப்சி

லேஸ் சிப்ஸ் மற்றும் பெப்சி

லேஸ் சிப்ஸ் மற்றும் பெப்சி பானங்கள் தயாரிப்பாளர், இந்தியா மற்றும் சீனாவில் கணிசமான பங்கினை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை சீனா, இங்கிலாந்து, இந்தியா, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் நாங்கள் குறிப்பிட்ட ஸ்னாக்ஸ் சந்தை பங்கினை பெற்றுள்ளோம் என்றும் நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

பெப்சிகோ தனது மொத்த வருவாய் விகிதமானது 5.2% அதிகரித்து, 20.23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இது இனி வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PepsiCo announced double digit growth in Indian foods and drinks business

PepsiCo announced double digit growth in Indian foods and drinks business/இந்தியாவில் தூள் கிளப்பி வரும் அமெரிக்க நிறுவனம்.. எப்படி தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.