இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை வர்த்தகத்திலேயே, ஜூன் மாத பணவீக்க தரவுகள் வெளியாகும் நிலையில் புதிய வரலாற்று உச்சமாக 79.63 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் வேளையில் விரைவில் அடுத்த கட்ட வட்டி உயர்வை உலக நாடுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா.. ஆடிப்போன கஸ்டமர்..!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் இந்திய நாணயத்தில் வர்த்தகத்தை ஆதரிப்பதற்காகச் சர்வதேச வர்த்தகத்திற்கான ரூபாய் செட்டில்மென்ட் முறையை இந்திய ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

இந்தியா ரஷ்யா வர்த்தகம்

இந்தியா ரஷ்யா வர்த்தகம்

இந்தப் புதிய முறையின் கீழ், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சிறப்பு வொஸ்ட்ரோ (Vostro) கணக்கைப் பயன்படுத்தி ரசீதுகள் மற்றும் பணம் செலுத்துவதை ரூபாய் வாயிலாகச் செய்ய முடியும். இப்புதிய வர்த்தக முறை மூலம் இந்தியா ரஷ்யா உடன் ரூபாய் வாயிலாக வர்த்தகம் செய்ய முடியும்.

ரூபாய் மட்டும் போதும்
 

ரூபாய் மட்டும் போதும்

இந்த புதிய சிறப்பு வொஸ்ட்ரோ (Vostro) கணக்கு கட்டமைப்பு மூலம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் இனி டாலர், யூரோ போன்ற நாணயங்களில் செலுத்தப்படாமல், இந்திய ரூபாயில் செலுத்தலாம். இதேபோல் இந்த கட்டமைப்பை அனுமதிக்கும் வெளிநாடுகளும் டாலர் இல்லாமல் இந்திய ரூபாயில் பொருட்களை வாங்கலாம்.

அழுத்தம்

அழுத்தம்

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பெருமளவில் பணம் வெளியேறும் நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடங்கும் போது அமெரிக்க டாலருக்கு எதிராகச் சுமார் 74 இல் இருந்து, அது 6.7% குறைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் வரலாறு காணாத விதமாக 79.63 ரூபாய் வரையில் சரிந்தது.

எவ்வளவு மோசமானது

எவ்வளவு மோசமானது

நிச்சயமற்ற உலகப் பொருளாதாரம் மற்றும் அமெரிக்காவின் கொள்கை நடவடிக்கைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரே நாணயம் இந்திய ரூபாய் மட்டும் அல்ல. ஜப்பானிய யென், போலந்து ஸ்லோட்டி, சிலி பெசோ மற்றும் தாய் பாட் ஆகிய நாடுகளின் நாணய மதிப்பும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு முக்கியக் காரணிகள்

இரண்டு முக்கியக் காரணிகள்

ரஷ்யா-உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா தனது பொருளாதாரத்தில் அதிகப்படியான பணவீக்கத்தை உருவாக்கியுள்ளது. இதேவேளையில் அமெரிக்கா அதன் பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அழுத்தம் “இடைநிலை” என்று தவறான மதிப்பீட்டின் வாயிலாக உலக நாடுகளின் பணவீக்கம் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலையுயர்ந்த பாடத் திருத்தம்

விலையுயர்ந்த பாடத் திருத்தம்

உக்ரைன் போருடன் சேர்ந்து, அமெரிக்கா தனது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கச் சந்தை லாபம் அடைந்தாலும், டாலரை நம்பி வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இது அமெரிக்காவின் தவறான கொள்கை கணிப்பினால் ஏற்பட்ட பாதிப்பு.

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்த போதும், ரூபாய் முதல் முறையாக மே மாதத்தில் 77-ஐயும், ஜூன் மாதத்தில் 78-ஐயும், ஜூலை மாதம் 79-ஐயும் தாண்டியது.

நடவடிக்கை

நடவடிக்கை

ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்களை அதிகளவில் விற்றது, அந்நிய செலாவணி வரவுகளை

அதிகரிப்பதற்காகக் கார்பரேட் பத்திர முதலீடுகள், குறுகிய கால முதலீடுகள் எனப் பல தளர்வுகளை அறிவித்தது. அதே நேரத்தில் அரசாங்கம் ரூபாய்க்கு உதவ இறக்குமதி மீது தங்க வரியை விதித்தது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

ரூபாயின் மதிப்பு திங்களன்று டாலருக்கு 79.49 ஆக மிகக் குறைந்த அளவை தொட்டது, செவ்வாய்க்கிழமை 79.63 ஆகச் சரிந்தது. பெடரல் ரிசர்வின் மோசமான நிலைப்பாடு காரணமாக ரூபாயின் கொடூரமான சரிவு தொடர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாரம் டாலருக்கு நிகரான ரூபாய் 80-ஐ தாண்டும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI New rupee settlement mechanism allows India – Russia Trade with Rupee (INR)

RBI New rupee settlement mechanism allows India – Russia Trade with Rupee (INR) இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.