இந்த ஒரு தவறை செய்தால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு சென்றுவிடும்!

சிபில் ஸ்கோர் என்பது வங்கியில் கணக்கு வைத்திருக்கும், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் முக்கியமானது.

சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகளில் லோன் வாங்க முடியும் என்றும் குறைவாக இருந்தால் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய சிபில் ஸ்கோரை அதிகமான அளவில் வைத்திருப்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

கடன் செயலிகள்

இந்த நிலையில் ஒருசில செயலிகளை பயன்படுத்துவதால் சிபில் ஸ்கோர் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடையும் என்று தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃபின்டெக் செயலிகள் என்று கூறப்படும் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கி அதை சரியான முறையில் திருப்பி செலுத்தாவிட்டால் சிபில் ஸ்கோர் அதலபாதாளத்திற்கு சென்று விடும் என்று கூறப்படுகிறது.

 ஃபின்டெக் செயலிகள்

ஃபின்டெக் செயலிகள்

ஊரடங்கு நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது மிகப்பெரிய பணியாக இருந்ததால் ஆன்லைன் மூலம் மிக எளிதாக கடன் வாங்க ஃபின்டெக் செயலிகளை பலர் பயன்படுத்தினர். வீட்டில் இருந்தபடியே ஒரு சில ஆவணங்களை பதிவு செய்தால் உடனடியாக ஆன்லைன் மூலம் கடன் பெற முடியும்.

எளிதாக கடன்
 

எளிதாக கடன்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கிடைத்த இந்த ஸ்டார்ட் அப் ஃபின்டெக் செயலிகளில் பெரிய ஆவணங்கள் இல்லாமல் சிறிய கடன்களை உடனடியாக பெறுவதற்கு எளிதாக இருந்தது.

சலுகைகள்

சலுகைகள்

ஃபின்டெக் செயலிகளும் தங்கள் வாடிக்கையாளரை கவர்வதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது என்பதும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் குறுகிய காலத்தில் பணத்தை திரும்பி செலுத்தக்கூடிய சிறிய தொகையை அளித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வது, குறுகிய காலத்தில் திரும்ப கட்டினால் வட்டியில்லாமல் அல்லது குறைந்த வட்டியில் திரும்ப செலுத்துவது உள்பட பல சலுகைகளை வழங்கியது. மேலும் ஒரு சில வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை 3 முதல் 6 மாதங்களுக்கு நீட்டிக்கவும் செய்தது.

மோசடி இல்லை

மோசடி இல்லை

எனவே மக்கள் தங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபின்டெக் செயலிகள் மூலம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தி வந்தனர். மற்ற ஆன்லைன் செயலிகள் போல் ஃபின்டெக் செயலியில் மோசடி எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த செயலியை நம்பி வாடிக்கையாளர்கள் பலர் கடன் வாங்கினர்.

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

வங்கியில் சென்று தனிநபர் கடன் வாங்குவதோ அல்லது வேறு வகையான லோன் வாங்குவதோ மிகப் பெரிய வேலையாக இருந்த நிலையில் ஃபின்டெக் செயலியின் மூலம் எந்தவித பெரிய ஆவணங்களும் இல்லாமல் எளிதாக சிறிய தொகைகள் கடன் பெறப்பட்டது.

திருப்பி செலுத்துதல்

திருப்பி செலுத்துதல்

ஃபின்டெக் செயலிகள் மூலம் கடன் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அந்த செயலிகளின் கடனை திருப்பி செலுத்த குறிப்பிடும் காலத்தில் சரியானபடி தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என்றால் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

குறிப்பாக ஃபின்டெக் செயலியில் கடன் வாங்கிவிட்டு அதை சரியான நாளில் திருப்பி செலுத்தவில்லை என்றால் சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு சென்று விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு ஃபின்டெக் செயலி மூலம் கடன் வாங்கினால் உடனடியாக அது சிபில் கணக்கில் பிரதிபலிக்கும் என்றும் சரியான வகையில் கட்டாவிட்டால் அது சிபில் ஸ்கோரை பெரிதாகவே பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே கடனை திருப்பி செலுத்த வேண்டிய தேதிகளை சரியாக குறித்து வைத்து அதை சரியான தேதியில் செலுத்தினால் சிபில் ஸ்கோரை சரியான நிலையில் வைத்திருக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சிபில் ஸ்கோரை மீட்கவும் முடியும்

சிபில் ஸ்கோரை மீட்கவும் முடியும்

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தும் முன்னர் சிபில் ஸ்கோர் மோசமாக வைத்திருந்தால் ஃபின்டெக் செயலிகளில் சிறிய அளவில் கடன் வாங்கி அதனை சரியாக செலுத்துவதன் மூலம் உங்கள் மோசமான கிரெடிட் ஸ்கோரை மீட்டெடுக்க உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடனை சரியாக செலுத்தினால்

கடனை சரியாக செலுத்தினால்

குறுகிய கால கடன்களை ஒருசில முறை ஃபின்டெக் செயலிகள் மூலம் வாங்கி அதனை சரியாக செலுத்தி சிபில் ஸ்கோரை அதிகரித்த நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக தற்போது கூறப்பட்டு வருகிறது. எனவே ஃபின்டெக் செயலிகளை சரியான வகையில் பயன்படுத்தினால் உங்கள் சிபில் ஸ்கோரை இழக்காமல் இருக்கலாம் என்பதும், மோசமான சிபில் ஸ்கோரை மீட்டு கொண்டு வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Beware use of Fintech services , It will break your cibil scores

Beware use of Fintech services , It will break your cibil scores | இந்த ஒரு தவறை செய்தால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு சென்றுவிடும்!

Story first published: Tuesday, July 12, 2022, 8:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.