மதுரையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அந்த வகையில், மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் சிலர் கஞ்சா பொட்டலங்கள் சக மாணவர்களுக்கு விற்பனை செய்த போது போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மூலம் ஆர்டர் எடுத்து, அவர்களின் லோகேஷன் ஷேர் செய்து சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.