சென்னை: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்திருக்கிறார். இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என அறிவிக்க கோரியும் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.