இலங்கைத் தலைவர்கள் ஏழை மக்களின் கதறலையும் மக்களுடைய தேவைகளையும் அலட்சியப்படுத்தவேண்டாம் என போப்பாண்டவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை போப்பாண்டவர் இலங்கைக்காக வெளியிட்ட ஒரு செய்தி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், இலங்கைத் தலைவர்கள் ஏழை மக்களின் கதறலையும் மக்களுடைய தேவைகளையும் அலட்சியப்படுத்தவேண்டாம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புனித பீற்றர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றிய போப்பாண்டவர், அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து அவதியுறும் இலங்கை மக்களுடன், தானும் நிற்பதாக தெரிவித்தார்.
நாட்டின் பிஷப்களுடன் இணைந்து, தானும் அமைதிக்கான முறையீட்டை புதுப்பித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
கூடவே, உக்ரைன் மக்களுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்ட போப்பாண்டவர், இந்த பைத்தியக்காரத்தனமான போரை முடிவுக்குக் கொண்டு வர கடவுள் வழிகாட்டட்டும் என்றார்.