இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய நேற்று நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக வெளியான செய்திகளை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவின் கோரிக்கை மறுக்கப்பட்டது
வார இறுதியில் கலிபோர்னியாவுக்கு செல்வதற்கு கோட்டாபய ராஜபக்ச விசா கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் SBS ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான புகலிடமாக கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவை நாடியதாகவும், எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் விசா இன்றி கோட்டாபய அமெரிக்காவுக்கு செல்வதற்கு அனுமதியுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் காரணமாக விண்ணப்பித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவிடம் அவர் பாதுகாப்பு வழி ஒன்றை கோரிய போதிலும் அது மறுக்கப்பட்டது என அமெரிக்க தூதரக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை விட்டு தப்பிக்க முயற்சிக்கும் பசில்! மத்தள விமான நிலையத்தின் கதவுகளும் மூடப்பட்டன |
ஆட்டம் கண்டுள்ள ராஜபக்சர்களின் அரசியல் வாழ்க்கை
இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சிப்பீடம் ஏறிய கோட்டாபய அரசுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவாக இலங்கையில் உருவாகிய வரிசை யுகம் பொதுமக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதுடன் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்தது.
கோட்டாபய தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி குறித்து விமானப்படையின் அறிக்கை |
மக்களின் போராட்டங்கள் காரணமாக கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார், அதனை அடுத்து நடந்த போராட்டங்களால் அமைச்சுப் பதவிகளில் இருந்த ராஜபக்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியதுடன், ஜூன் 9ஆம் திகதி பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 9ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட மக்கள் புரட்சி போராட்டங்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த ராஜபக்சர்களின் அரசியல் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முடியாத நிலைமை எதிர்கொண்டுள்ளனர் ராஜபக்சவினர்.
தனி ஜெட் விமானத்தில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் கோட்டாபய உட்பட 19 பேர்: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குரல் பதிவு |