எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக திவாகி விட்ட இலங்கையில், எரிபொருள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, தேசம் சீர்குலைந்துள்ள இந்த நேரத்தில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், தற்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர். 

இதனால், கொதித்தெழுந்த பொது மக்கள், அதிபர் மாளிகையை  சூரையாடியதில், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிபர் மாளிகையை சூரையாடிய பின் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் அதிகாரபூர்வ இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடி எரித்தனர். 

மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தானா?

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் ரணி விக்ரமசிங்க “எனக்கு சொந்தமான ஒரே ஒரு வீடு  தான் இருந்தது. இப்போது முற்றாக எரிந்து நாசமானது,” என்று புலம்பினார். “எனது மிகப்பெரிய செல்வமாகவும் பொக்கிஷமாகவும் எனது நூலகத்தில் இருந்த 2500 புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின” என அவர் மன வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், வீட்டில் இருந்த 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில கலைகள் மற்றும் ஓவியங்கள் அழிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் வெள்ளமென பாய்ந்த  போராட்டக்காரர்களை ஆயுதமேந்திய சிப்பாய்கள் மற்றும் போலீஸார் தடுக்க இயலவில்லை. மாளிகையை சூரையாடியதோடு, அதில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து விருந்து சாப்பிடும் வீடியோக்கள், நீச்சல் குளத்தில் ஆட்டம் போடு வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின. 

இலங்கையின் இன்றைய நிலை, திடீரென ஏற்பட்டதல்ல. இதன் விதை 10 ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கபட்டு விட்டது எனலாம். சீனாவுடனான நெருக்கம் மற்றும் கணக்கில் வராத கடன் ஆகியவை இலங்கையின் நிலைமையை மோசமாக்கியது. இன்று நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்போ,  பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களோ இல்லை. 

2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், தவறான கொள்கைகள் மற்றும் அதிக அளவிலான கடன்கள் காரணமாக இலங்கை திவால் ஆனது.

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா…

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.