ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்: ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: தொலைத்துர ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளையும்  குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற இரயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் தொலை தூரம் செல்லும் ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் ரயில்களையே நம்பி உள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலனோர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் மத்தியில் பாஜக அரசுஅமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் மறைமுகமாக அதிகரிக்கப்பட்டு வருவதுடன் சாதரண பேசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. தனியார் மையத்தை ஊக்குவித்து வரும் ஒன்றிய அரசு ரயில்வேதுறையும் மெல்ல மெல்ல தனியாரிடம் தாரை வார்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த குடிமக்கள் கட்டணச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதனால் தொலைத்தூரங்களுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் அதிக கட்டணம் குடுத்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. சாதரண ரயில்களை பெயர் மாற்றம் செய்து மக்களிடம் அதிக கட்டணங்கள்  வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டம் ஒன்றை  ஒன்றிய  அரசு நடைமுறை படுத்த  திட்டமிட்டுள்ளது. அதன்படி அணைத்து தொலைத்தூர ரயில்களிழும் முன்பதிவு வசதி கொண்ட இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இனி இணைக்கப்படும். மீதமுள்ள பெட்டிகள் அணைத்தும் குளிர்சாதனப்பெட்டிகளாக மாற்றவும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரண்டு பெட்டிகளில்  மட்டும் முன்பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் நிலை உருவாகியுள்ளது. மற்ற பெட்டிகள் அணைத்தும் குளிர்சாதன பெட்டிகளாக மாற்றப்படுவதால் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படும். முதல் கட்டமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன்,முத்துநகர்,பொதிகை,மலைக்கோட்டை,சோழன் மற்றும் கோவை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த பட உள்ளது. இதனால் சாதரண ஸ்லீப்பர் பெட்டிகளில் இடம் கிடைக்காத மக்கள் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விமான சேவைக்கு இணையான ரயில்வே துறையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினாலும் ஒன்றிய  அரசின் இந்த முடிவால் பட்ஜெட் பயணமாக கருதப்பட்ட ரயில் பயணம் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.