வங்கி வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களால் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தங்களது வங்கி கணக்கை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் மாற்ற வேண்டும் என்றால் நேரடியாக வங்கியில் சென்று கடிதம் வாங்கி அதனை வேறு வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் வங்கி கிளைகளை மாற்றிக் கொள்ளும் வசதியை ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.
தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி அக்கவுண்டை வேறு கிளைக்கு மாற்ற வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு கிளை
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு ஆரம்பித்த ஒருவர் வேறு நகரத்திற்கு மாற்றலாகி சென்று விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக புதிய ஊருக்கு சென்று விட்டாலோ அந்த ஊரில் உள்ள வங்கிக் கிளையில் அக்கவுண்டை மாற்ற விருப்பம் தெரிவிப்பது வழக்கமான ஒன்று. ஏனெனில் வெகு தொலைவில் உள்ள பழைய வங்கி கிளைக்கு சென்று பரிவர்த்தனை செய்வது கடினம் என்பதால் வங்கி அக்கவுண்டை அருகில் உள்ள கிளைக்கு மாற்றிக் கொள்வதுதான் எளிதான வழி என்பது குறிப்பிடத்தக்கது
ஆன்லைன்
எனவே நம் அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு நமது அக்கவுண்ட்டை மாற்றி கொள்வதற்கு ஹோம் கிளைக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலமே வங்கி அக்கவுண்டை மாற்றிக்கொள்ளலாம்
இரண்டு வழிகள்
வங்கி கிளையை மாற்றி கொள்ள மொபைல் பேங்கிங் மற்றும் இண்டர்நெட் பேங்கிங் என இரண்டு வழிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ வாங்கி அக்கவுண்டை ஒரு கிளையில் இருந்து இன்னொரு நிலைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
மொபைல் பேங்க் மூலம் மாற்றுவது எப்படி?
* ஐசிஐசிஐ மொபைல் பேங்கிங் வசதி பெறுவதற்கு முதலில் உங்கள் மொபைலில் ஐசிஐசிஐ செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் ஐசிஐசிஐ ஐமொபைல் பேங்கிங் செயலியில் லாகின் செய்ய வேண்டும்.
* முதலில் சர்வீஸஸ் என்பதை கிளிக் செய்து அதில் வரும் அக்கவுண்ட் சர்வீஸஸ் என்பதை கிளிக் செய்தால், Transfer your Accounts என வரும். இதனை கிளிக் செய்ய வேண்டும். பின் நம்முடைய வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர் உங்கள் புதிய ஐசிஐசிஐ கிளையை தேர்வு செய்து, புதிய கிளையின் மாநிலத்தை தேர்வு செய்து, புதிய கிளையின் நகரத்தை தேர்வு செய்து அதன்பின் கிளையை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக submit கொடுத்துவிட்டால் உங்கள் வங்கி கணக்கு நீங்கள் விரும்பிய கிளைக்கு மாற்றப்படும்.
இண்டர்நெட் பேங்கிங் மூலம் மாற்றுவது எப்படி?
* முதலில் ஐசிஐசிஐ அதிகாரபூர்வ இணையதளம் சென்றும் இன்டர்நெட் பேங்கிங்கில் லாகின் செய்ய வேண்ட்ம். பின் கஸ்டமர் சர்வீஸ் என்ற பிரிவுக்கு சென்று Service Request என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* Request பிரிவில் Account Details Modification என்பதை தேர்வு செய்து அதில் உள்ள Transfer Your Account to your nearest branch என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* அதன் பின் உங்கள் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து புதிய கிளையின் மாநிலம், நகரம் மற்றும் புதிய கிளையை தேர்ந்தெடுத்த பின்னர் submit செய்தால் உங்கள் வங்கிக்கணக்கு மாறிவிடும்
5 நாட்கள்
ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு வங்கி கணக்கை மாற்றம் செய்ய வேண்டுகோள் விடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் மாற்றம் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
How to transfer your ICICI bank account to another branch by online?
How to transfer your ICICI bank account to another branch by online?|ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே, வேறு கிளைக்கு அக்கவுண்டை மாற்ற வேண்டுமா? இதோ முழு விபரங்கள்!