கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறும் முயற்சியில் கோட்டாபய! உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்தி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக ஏஎப்பி செய்திச் சேவை அறிவித்துள்ளது.

விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி ஜெட் விமானத்தில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் கோட்டாபய உட்பட 19 பேர்: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குரல் பதிவு 

நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய நெருக்கடி 

கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறும் முயற்சியில் கோட்டாபய! உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்தி | Gotabaya Trying To Leave The Country By Sea

சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது.

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட அந்நிய செலாவணி போதுமானதாக இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தை ராஜபக்ச அரசாங்கம்  தவறாக நிர்வகிப்பதாகக் குற்றம் சாட்டி, ஜனாதிபதியை உடனடியாக பதவி விலக வேண்டும் என  நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை தனது பதவி விலகல்  கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் கோட்டாபய

கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறும் முயற்சியில் கோட்டாபய! உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்தி | Gotabaya Trying To Leave The Country By Sea

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பின்னர் நேற்று மாலை டுபாய் இராச்சியம் நோக்கிப் புறப்படுவதற்காக விமானம் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பினார்.

கோட்டாபய பதவி விலகாவிடின் நாளை மறுதினம் நாடு முடங்கும்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை 

எவ்வாறாயினும், விமான நிலையம் மற்றும் விமானப் பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு விமானம்  வழியாக வெளியேறும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்தது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் கடற்படை ரோந்துக் கப்பலில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து ஜனாதிபதியின் நெருங்கிய இராணுவ உதவியாளர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.