கனடாவுக்கு மனைவி சென்ற மூன்று மாதங்களில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கோஸ்லா கிராமத்தை சேர்ந்தவர் ககந்தீப் சிங் (23). இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ககந்தீப் மரணத்திற்கு கனடாவில் உள்ள அவர் மனைவி தான் காரணம் என சகோதரியான கிரந்தீப் கவுர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், ககந்தீப்பின் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சென்றார்.
கனடாவில் தங்கியிருந்த போதிலும், அவர் எனது சகோதரரிடம் பணம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் ககந்தீப் இருந்தார், சம்பவ நாளிலும் போனில் ககந்தீப்புடன் அவர் சண்டை போட்ட நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்தே மனம் வெறுத்து போன அவர் போனில் பேசிய பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பில் பொலிசார் சரியான விசாரணை நடத்தி உயிரிழந்த ககந்தீப்புக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கிய நிலையில் கனடாவில் உள்ள அப்பெண்ணிடமும் விசாரிக்கவுள்ளனர்.
Representational image