காதல் கணவருடன் ஹோட்டலில் பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் திடீர் மரணம்- உறவினர்களின் ஷாக் புகார்!

விழுப்புரம் அருகேயுள்ள அன்னியூரில் காதல் திருமண செய்த இதய பிரச்னை உள்ள இளம்பெண் தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்த பிரதிபா – விஜயகுமார் என்ற காதல் தம்பதியினர் கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ பார் என்ற உணவகத்தில் ஒயிட் பாஸ்தா என்ற உணவினை வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துள்ளனர்.
image
இரவு பிரதிபா உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கவே அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணவரான விஜயகுமார் சேர்த்தபோது இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோரான பழனி என்பவர் கஞ்சனூர் காவல்நிலையத்தில் தனது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து இறந்து விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
image
இறந்த பெண் இதய அடைப்பு பிரச்னை காரணமாக மாத்திரை எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. உடற்கூறு ஆய்வில் தான் இளம்பெண் பாஸ்தா உணவு செரிக்காமல் இறந்தாரா அல்லது உணவில் விஷம் கலந்து இறந்தாரா என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து இளம்பெண்ணின் கணவரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.