காதல் கலாட்டாதான் இந்த ‘கிச்சு கிச்சு’!

காதல் கலாட்டாதான் இந்த ‘கிச்சு கிச்சு’!

காதல் கலாட்டாதான் இந்த ‘கிச்சு கிச்சு’!

7/12/2022 9:49:35 PM

தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த ராஜன் இயக்கத்தில், அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கிச்சு கிச்சு”. ஒரு இளைஞனின் காதல் தேடல் கதையாக உருவாகியுள்ளது. படம்வெளியீட்டுக்கு இடையே நம்மிடம் பேசினார்கள் படத்தின் இயக்குநர் ஆனந்த ராஜன் ,நாயகன் அசார், நாயகி மனீஷா ஜித்.

எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர். 2002ல சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன், சமுத்திரகனி சார் கிட்ட கொஞ்ச காலம் அசிஸ்டன்ட்டாக வேலை செய்தேன். கே.பாலச்சந்தர் சார் கிட்ட ரெண்டு சீரியல். அடுத்து இயக்குநர் ஆர்.எஸ்.எஸ் சுரேஷ் கிட்ட , ’நம் நாடு’, ’வவ்வால்’ இப்படி இரண்டு படங்களில் வேலை செய்தேன். மூர்த்தி சார் கிட்ட ’வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் வேலை செய்தேன். அடுத்து சி.ஜே.பாஸ்கர் சார் கூட வேலை செய்யற வாய்ப்புக் கிடைக்க, அங்கே தான் விஜய் சேதுபதி சார் நட்பு கிடைச்சது.  என்னும் ஆனந்த ராஜன் ’கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படம் எப்படி ’கிச்சு கிச்சு’ என்னும் தலைப்புக்கு மாறியது என மேலும் விவரித்தார்.

 செம ஜாலியான பெயரா இருக்கட்டும்னு தான் ’கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ ன்னு வெச்சோம். ஆனா அந்த படத்துக்கு ஒரு புரமோஷன் பாடல் உருவாக்கினோம் அந்த பாடல் எங்களுக்கு பேக்ஃபையர் ஆகிடுச்சு. ஜாலியா ஒரு கதை, அப்படி யோசிச்சு உருவாக்கினது தான் இந்த ’கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ . பாடலும் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் காதல் எவ்வளவு தேவைன்னுதான் வரிகளா வரும். என்னவோ சட்டேன நெகடிவ் ஆகிடுச்சு. இப்போ ‘கிச்சு கிச்சு’ ஆகிடுச்சு. அசார் இந்த படத்துக்குள்ள எப்படி வந்தார் தொடர்ந்து பேசினார் இயக்குநர்.

 துருதுருன்னு ஒரு ஹீரோ வேணும்  அப்படி தேடினதில் கிடைச்சவர்தான் அசார். ஆக்சுவலி அசார் நடிச்ச முதல் படம் இதுதான். ஆனா மூணாவது படமா மாறிடுச்சு. செம திறமையான ஆளு, இன்னமும் அவருக்கான ஸ்டேஜ் கிடைக்கலை. சீக்கிரம் பெரிய ஹீரோவா வருவார்.

 ’படத்தில் ஹீரோ நான் தான் ஆனா கதையின் நாயகர்கள் நிறைய பேர் இருக்காங்க’ இடையில் தொடர்ந்தார் படத்தின் நாயகன் அசார். செம ஜாலியான படம் செம ஜாலியான கதை. படத்துல எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் கிடையாது ஏன் பரம்பரைக்கே கிடையாது. ஆனாலும் ஒரு நல்லது நடக்கட்டுமே அப்படின்னு ஒரு வாழ்க்கை துணையை தேடி போற பயணம் தான் இந்த ’கிச்சு கிச்சு’. என் குடும்பத்தில் யாருக்கும் வாழ்க்கை துணை அப்படின்னு ஒன்னு அமையவே இல்லை.

அதில் கடைசி பையனா எனக்கு திருமணம் நடத்தி வச்சா எங்க குடும்பத்தினுடைய சாபம் சரியாகும் அப்படிங்கறது தான் இந்த படத்தினுடைய ஒன் லைன் அதுக்கான முயற்சியிலே நான் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறேன் என்கூட யாரெல்லாம் பயணிக்கிறார்கள் அப்படிங்கறது தான் கதை. படத்தின் நாயகர்கள் நிறைய பேர் இருக்காங்க அப்படின்னு சொன்னேன் இல்லையா யோகி பாபு அண்ணன் ஒரு ஹீரோ. மன்சூர் அலிகான் சார் ரொம்ப முக்கியமான ஒரு ரோல் செய்திருக்கார் அவரும் ஒரு ஹீரோ, செந்தில் சார் ஒரு ஹீரோ,  லொள்ளுசபா சுவாமிநாதன் சார் ஒரு ஹீரோ, இவங்களையெல்லாம் கடந்து தான் என்னுடைய கேரக்டர் பிளஸ்சா தெரியும். கிட்டத்தட்ட சைடு ரோல் அப்படின்னு கூட சொல்லலாம்.

 படம் முழுக்கவே கலகல காமெடிக்கு பஞ்சமே இருக்காது, தொடர்ந்தார் இயக்குனர் ஆனந்த ராஜன்.  இந்த படம் இவ்வளவு கலர்ஃபுல்லா அமைய படத்தினுடைய கேரக்டர்களும் மிகப்பெரிய காரணம். எப்படி துரு துருன்னு ஒரு பையனா அசார் கிடைச்சாரோ அதேபோல சுட்டியா ரொம்ப வெகுளித்தனமாக ஒரு ஹீரோயின் தேவைப்பட்டாங்க அவங்க தான் மனிஷாஜித். ஏற்கனவே குழந்தை நட்சத்திரமா ரொம்ப பிரபலமான பொண்ணு மனிஷாஜித் இந்த படத்திலும் ஒரு குழந்தை தன்மையுடன் கூடிய ஹீரோயின். எதையுமே வெகுளித்தனமாக நம்பக்கூடிய கேரக்டர் அதுக்கு மனிஷா மிகப் பொருத்தமா இருந்தாங்க.

 நான் தேர்வு செய்யற கதைகளுக்கும் கேரக்டருக்கும் ரொம்ப பொருத்தமா கிச்சு கிச்சு படம் இருந்துச்சு’ தொடர்ந்தார் படத்தின் நாயகி மனிஷாஜித். கதை கேட்கும் போதே என்னுடைய லிமிட் என்னவோ நான் எப்படிப்பட்ட கதைகள் நடிக்கிறேனோ அந்த பிரேம்குள்ள இந்த கிச்சுகிச்சு படம் பொருந்துச்சு. டைரக்டர் சொல்கிற மாதிரி படத்தில் எனக்கு குழந்தைத்தனமான கேரக்டர் என்றாலும் அதிலேயும் ரொம்ப பக்குவமா ரொம்ப முக்கியமான கட்டங்களில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கற விதமா அந்த கேரக்டர் இருந்துச்சு. கதை என்னை சுத்தியே நடக்கும். அதுதானா ஒரு ஹீரோயினுக்கு தேவை. அதனால் இந்த கதை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஷூட்டிங் ஸ்பாட்டே செம ஜாலியா இருக்கும். அசார் வேற எதைப் பேசினாலும் கவுன் டர் போடுவார், இதுக்கு மேலே யோகி பாபு சார், சுவாமிநாதன் சார் செம ஜாலி டீம்.

மனிஷா முடிக்க கோரஸாக சொல்கிறார்கள் ‘படம் உங்க டிக்கெட் காசுக்கு நிச்சயம் ஒரு ஜாலியான டைம் பாஸ் படமா திருப்தியான ஃபீல் கொடுக்கும்’.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.