குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்கனுமா.. இந்த 4 வழியினை பலோ பண்ணுங்க..!

சமீபத்திய காலமாக வங்கிகளில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு கடன் வாங்குவர்களுக்கு மேலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம்.

எனினும் இந்த காலக்கட்டத்திலும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்க என்ன வழி? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!

சிபில் ஸ்கோர்?

சிபில் ஸ்கோர்?

முடிந்த மட்டில் உங்களது சிபில் ஸ்கோரினை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது வீட்டுக் கடன் மட்டும் அல்ல, எல்லா கடன்களுக்கும் குறைந்த வட்டியில் வாங்க வழிவகுக்கும்.

ஆக வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்த பழங்குங்கள். இதுவே உங்களின் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம் குறைவான வட்டியிலும் நீங்கள் கடன் வாங்க முடியும். பொதுவாக 750-க்கும் மேலாக உங்க கடன் மதிப்பெண் இருந்தால், எளிதில் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.

குறைந்த அளவு பணம் வாங்கலாம்

குறைந்த அளவு பணம் வாங்கலாம்

ஆர்பிஐ கடன் வழங்குபவர்களுக்கு சொத்து மதிப்பில் 75% முதல் 90% வரையில் கடன் கொடுக்க அனுமதிக்கிறது. ஆக மீதமுள்ள 10% – 25% வரையில் நீங்களாக செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கான வட்டி விகிதம் என்பது உங்களது கடன் பரிவர்த்தனைகளை பொறுத்து இருக்கும். உங்கள் வருமானத்தின் அடிப்படையில் திரும்ப செலுத்தக்கூடிய தொகையை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் சொத்தினை வாங்குங்கள். அதுவே உங்களின் கடன் அளவை குறைக்க வழிவகுக்கும்.

டிரான்ஸ்பர் ஹோம் லோன்
 

டிரான்ஸ்பர் ஹோம் லோன்

நீங்கள் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அங்கு வட்டி அதிகம், இதனை விட மற்ற வங்கிகளில் கடன் கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். தாராளமாக உங்களது கடனை மற்ற வங்கிகளுக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். சிறிய அளவிலான வட்டி குறைப்பு கூட பெரியளவிலான தொகையை சேமிக்க உதவும்.

குறிப்பாக மிகப்பெரிய அளவில் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது மிக நல்ல விஷயமாக இருக்கும். இது லோன் டிரான்ஸ்பர், லோன் டாப் அப் என பல வகையிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். எங்கு குறைவான வட்டி கிடைக்கிறதோ அங்கு வாங்கலாம்.

கணிசமான அளவு பணம் செலுத்துங்கள்

கணிசமான அளவு பணம் செலுத்துங்கள்

ஆர்பிஐ கடன் வழங்குபவர்களுக்கு சொத்து மதிப்பில் 75 – 90% வரை வீட்டுக் கடனாக அனுமதிக்கலாம். மீதமுள்ள 10 – 25% தொகையினை நீங்களாக செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் கடன் தொகையும் குறையும். அதோடு உங்கள் பட்ஜெட்டில் தேர்தெடுக்கும்போது இன்னும் உங்கள் கடன் தொகை குறைய இது வழிவகுக்கும்.

கோ அப்ளிகேண்டினை சேருங்கள்

கோ அப்ளிகேண்டினை சேருங்கள்

வட்டி விகிதத்தினை குறைக்க மற்றொரு முக்கிய வழி உங்களது கடன் விண்ணப்பத்திலேயே, கோ அப்ளிகேண்டினையும் சேருங்கள். இதன் மூலம் உங்கள் ஹோம் லோனுக்கான பிரச்சனையை குறைகக் முடியும். இது உங்களது தகுதியினையும் அதிகரிக்கும். ஏனெனில் நீங்கள் உங்களது கூடுதல் வருமானத்தினையும் காட்டுகிறீர்கள். இது கிரெடிட் ஸ்கோரினையும் அதிகமாக காட்டும். ஆக இது எளிதில் குறைவான வட்டியில் கடன் வாங்க வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Follow these 4 ways to get a low interest home loan

Follow these 4 ways to get a low interest home loan/குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்கனுமா.. இந்த 4 வழியினை பலோ பண்ணுங்க..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.