கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு பெற்றது. வழக்கில் ஆறுக்குட்டியின் மகன் அசோக்பாபுவும் விசாரணைக்கு ஆஜராகினார். ஏற்கெனவே 2 முறை ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 3-வது முறையாக விசாரணை நடத்தியது.