கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
குறிப்பாக கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.
கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.
அதுமட்டுமின்றி கொய்யா இலைகள் சருமம், கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தருகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.
- கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.
- கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
- கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.
- கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி பலம் பெறும்.
-
கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.