உங்களுக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை சர்க்கரை நோயால் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால். இனி கவலை வேண்டாம். சரியான டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து சாப்பிட்டால், சக்கரை அளவை அது அதிகரிக்காது. மேலும் இன்சுலின் சுரப்பியை நன்றாக செயல்பட உதவும் என்று ஆய்வுகள் தெரிவிகின்றன.
நீங்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிடும் முன், சக்கரை நோய்க்கும், டார்க் சாக்லேட்டுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். டார்க் சாக்லேட்டில் பாலிபினால் (poly phenols) இருப்பதால், அதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடலை பாதிக்கும் விஷயங்களில் இருந்து காப்பாற்றுகிறது. மேலும் பாலிபினால்ஸ் இன்சுலின் சுப்பிகளை சரியாக செயல்பட தூண்டுகிறது.
இதனால் பாலிபினால் அதிகம் உள்ள டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். இதில் கொக்கோ சதவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் சாக்லேட் வாங்கும்போது அதன் சத்துக்கள் தொடர்பான விவரங்களை படித்து பார்க்க வேண்டும். மேலும் நார்சத்து நிறைந்த டார்க் சாக்லேட்டை தேர்வு செய்ய வேண்டும்.
சுகர் ஃபிரீ டார்க் சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறது. அதையும் நாம் தேர்வு செய்து சாப்பிடலாம். மேலும் குறைவான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.