தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது.இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது.
எனினும் தொடர்ந்து தங்கம் விலையானது குறையுமா? இந்த இடத்தில் வாங்காலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? தொடர்ந்து தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.
டாலர் Vs தங்கம்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த வார இறுதியில் சற்று வலுவிழந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் இந்த வார தொடக்கத்தில் இருந்து சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது மீண்டும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத சரிவில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது 20 வருட உச்சத்தில் இருந்து மீண்டும் டாலரின் மதிப்பு வலுவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் ஸ்பாட் கோல்டின் விலையானது 1734.97 டாலராகவும், இது கடந்த அமர்வில் 1722.36 டாலரினையும் எட்டியது. ஐரோப்பாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரெசசன் அச்சமும் நிலவி வருகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு
இதற்கிடையில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு இது விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 52,300 ரூபாயினை எட்டியது. இது இந்திய அரசு இறக்குமதி வரியினை அதிகரித்த நிலையில், இந்த ஏற்றம் கண்டது. இது தங்கம் விலையினை விலை உயர்ந்ததாகவும் மாற்றியுள்ளது.
முக்கிய டேட்டா
தங்க வர்த்தகர்கள் வரவிருக்கும் நாட்களில் வெளியாகவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவினை கவனித்து வருகின்றனர். இது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இது வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றிய முக்கிய முடிவு எடுக்கவும் வழிவகுக்கலாம்.
பத்திர சந்தை ஏற்றம்
ஆக அதிகளவிலான வட்டி அதிகரிப்பு என்பது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இதனை தொடர்ந்து பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதனை காட்டும் விதமாக தொடர்ந்து கோல்டு இடிஎஃப்-ல் இருந்து முதலீடுகள் வெளியேறிய வண்ணம் உள்ளன. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
கொரோனா அச்சம்
சீனாவில் தொடர்ந்து கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், இது மீண்டும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தங்கம் நுகர்வில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
சர்வதேச சந்தை நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1729.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கிட்டத்தட்ட 1% குறைந்து, 18.965 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 50,617 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 280 ரூபாய் குறைந்து, 56,645 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4680 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் தூய தங்கத்தின் விலையும் இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 5105 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,840 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை நேற்று சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,800
மும்பை – ரூ.46,950
டெல்லி – ரூ.46,950
பெங்களூர் – 46,980
கோயம்புத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,800
gold price today falls as soaring dollar? is it a right time to buy?
gold price today falls as soaring dollar? is it a right time to buy? gold price today falls as soaring dollar? is it a right time to buy?/ சாமானிய மக்கள் ஹேப்பி.. தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. எம்புட்டு குறைசிருக்கு தெரியுமா?