சிறார் பாலியல் குற்றத் தகவல்: இந்தியாவுடன் பகிரும் இன்டர்போல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : சிறார் பாலியல் குற்றங்கள் குறித்த விபரங்களை இணையம் வாயிலாக பரஸ்பரம் பகிரும் நாடுகள் பட்டியலில், இந்தியா இணைந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, வலைதளத்தில் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றங்களை கண்டுபிடிக்கவும், அது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பகிரவும் தனி பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இது குறித்து சி.பி.ஐ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இன்டர்போல் அமைப்பில், 295 நாடுகள் உள்ளன. இதில், இணையம் வாயிலாக நடக்கும் சிறார் பாலியல் குற்றங்கள் தொடர்பான விபரங்கள், 67 நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த பட்டியலில், இந்தியா 68 வது நாடாக இணைந்துள்ளது.

latest tamil news

இதன் வாயிலாக, உலகளவில் இணையம் வாயிலாக நடக்கும் சிறார் பாலியல் குற்றங்களின் விபரங்கள், பாதிக்கப்பட்ட சிறார்கள், குற்றவாளிகள் உள்ளிட்டோரின் தகவல்கள் சி.பி.ஐ.,க்கு கிடைக்கும்.இதை வைத்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். பாதிக்கப்பட்ட சிறார்களைகாப்பாற்றலாம்.

இந்தியாவில், 2017 – 20 வரையிலான மூன்று ஆண்டுகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான இணைய வழி சிறார் பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், 14 வயதிற்கு உட்பட்ட சிறார்கள். இனி, இத்தகைய குற்றத் தகவல்கள் கிடைக்கும் என்பதால், குற்றவாளிகளை விரைந்துபிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.