தொற்று பரவலை தவிர்க்க 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுமறு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் ஐரோப்பிய சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில் ஒமிக்ரானின் மாறுப்பாட்டின் திரிபு பிஏ 5 மாறுபாடு அதிகளவில் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.