பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் இரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளன. ஒரு அரங்கில் ஒரே நேரத்தில் 50 போட்டிகளும், மற்றொரு அரங்கில் 70-க்கும் மேற்பட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.
தற்போது இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. இதற்கு https://tickets.aicf.in/ என்ற வலைதளத்தில் சென்று ஒலிம்பியாட் தொடருக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 200 மற்றும் 300 ரூபாய்க்கும் இந்தியாவில் இருந்து ஒலிம்பியாட் தொடரை பார்க்க விரும்பும் நபர்களுக்கு 2000 மற்றும் 3000 ரூபாயிலும், வெளிநாட்டை சார்ந்த நபர்களுக்கு 6000 மற்றும் 8000 ரூபாய்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM