ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சுமார் 12 ஆண்டுகால கனவை பிரதமர் இன்று நிறைவேற்றி இருப்பதாகவும், இது ஜார்கண்ட் மக்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்றும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.