
ஜூலை 22ல் வெளியாகும் அருள் நிதியின் தேஜாவு!
டி பிளாக் என்ற படத்தை அடுத்து அருள்நிதி நடித்துள்ள புதிய படம் தேஜாவு. அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள இந்த படத்தில் அருள்நிதியுடன் மதுபாலா, ஸ்மிருதி, ராகவ் விஜய், மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில் அருள்நிதியின் பிறந்தநாள் 21ம் தேதி என்பதால் அதற்கு அடுத்த நாள் ஜூலை 22 ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுகுறித்த ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது.