வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் பிரமாண்ட்ட சக்தி மற்றும் திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகளின் பல ஆண்டு உழைப்பில், 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டது. இது, நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று, சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி, நாம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.
இந்த வகையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு வெளியாக உள்ளது. இந்த தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட முதல் வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் நேற்று வெளியிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement