ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி
விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள தொலை நோக்கி கருவிதான், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. நாசா நிறுவனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாக இது பார்க்கப்படுகிறது.குறிப்பாக இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக இருக்கும் என்றே நம்பலாம். இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் கடின உழைப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது.
6 ஆயிரம் கிலோ எடையுள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் 21.32 அடி அகலம் கொண்ட தங்க கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு நுண்ணிய பிரதிபலிப்பானாக செயல்படுகிறது. இதன் செயல்பாட்டின் முக்கிய நோக்கம், நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுக்காகவும், குறிப்பாக பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக விண்வெளியில் ஏவப்பட்ட ஸ்பிட்சர் மற்றும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி போன்று இருந்தாலும் அதைவிட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டதாகும். 1990 ல் செலுத்தப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியில் சில பிரச்சினைகள் ஏற்படவே, அதை சரி செய்து சாதிக்க, பல மடங்கு உழைப்பை கொட்டி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.
எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இதன் ஆயுட்கால அளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
இந்நிலையில் 2021 – டிசம்பர் 25ஆம் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப் பாதைக்கு வெளியே சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் L2 லெக்ரான்ஞ்ச் புள்ளியில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி நிலைநிறுத்தப்பட்டது. இப்புள்ளியானது சூரியன்-பூமியின் ஈர்ப்பு விசை சமநிலை பெறும் ஐந்து லெக்ரான்ஞ்ச் புள்ளியில் ஒன்றாகும்.
இப்படியாக கடின முயற்சியில் விண்ணில் நிலை நிறுத்த எக்கசக்க காரணங்கள் சொல்லலாம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் மிக துல்லியமாகக் காணமுடியும். இதுவரை கிடைக்காத விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்.
இந்நிலையில், அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் சென்றுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள தொலைநோக்கி, விண்வெளி நட்சத்திரங்களை மிக துள்ளியமாக புகைப்படம் எடுக்க தொடங்கி விட்டது. ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பிற்கு நல்ல பலனை கொடுக்க தொடங்கிவிட்டது.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை ஜூலை 12ஆம் தேதி வெளியிடுவதாக நாசா அறிவித்திருந்தது. அதற்கான டீசர் புகைப்படத்தை ஏற்கனவே நாசா வெளியிட அது உலக மனித குலத்தையே அந்த படம் திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில், தற்போது தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஜோ பைடன் மூலமாக நாசா வெளியிட்டது.
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆரம்ப அண்டத்தின் ஒரு பகுதி இப்படத்தில் இருந்தது.அதாவது 13 பில்லியன் ஆண்டுகளாகப் பயணம் செய்து வந்த ஒருசில போட்டான்கள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகளில் மோதியிருக்கின்றன. அந்த ஒருசில போட்டோன்களே, போட்டோக்களாகி இருக்கின்றன.
மேலும் படிக்க | Galaxy Zoo project: 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா
அதைத்தொடர்ந்து மேலும் இன்று நாசா வெளியிடப்படவுள்ள புகைப்படத்தை காண உலகமே காத்திருக்கிறது. விண்வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், பால்வளி அண்டங்கள் என ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளை காண காத்திருக்கின்றனர். அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிப் படமெடுக்கும்போது, பேரண்டத்தை ஆறு நாட்களில் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்ற கடவுளின் கால் விரலையாவது ஜேம்ஸ் வெப் ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்று எழுத்தாளர்கள் ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். இப்படியாக காத்திருப்புக்கு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்து அனுப்பும் புகைப்படங்களே அதற்கான பதிலை கொடுக்கும்
மேலும் படிக்க | Aliens Search: ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR