ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறிப்பாக ஈரான், ரஷ்யா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுடன் வணிகம் செய்வதை எளிதாக்கும்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் இந்திய வர்த்தகர்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் இந்திய வர்த்தகர்களுக்கு தடை விதிகப்படலாமோ என்ற அச்சம் நிலவி வந்தது.
ரயில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா.. சாமானிய மக்கள் கவலை..!
தயக்கம் காட்டும் வணிகர்கள்
ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இன்று வரையில் சுமூக தீர்வு எட்டிய பாடாக இல்லை.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள், பல தடைகளை விதித்துள்ளன. பல தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவுடன் வணிக நடவடிக்கையில் ஈடுபட பல்வேறு தரப்பும் தயக்கம் காட்டி வருகின்றன.
நடு நிலை வகித்து வரும் இந்தியா
எனினும் இப்பிரச்சனையின் தொடக்கம் முதல் கொண்டே இந்தியா நடு நிலை வகித்து வருகின்றது. முன்பை விட வணிக நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது. ரஷ்யாவும் பல்வேறு வணிக வாய்ப்புகளை இந்தியாவுக்கு கொடுத்து வருகின்றன. ஆனால் இதன் மத்தியில் பெரும் பிரச்சனையாக இருந்தது எவ்வாறு கட்டணம் செலுத்துவது என்பதே.
வணிகம் மேம்படும்
இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியானது ரூபாயிலேயே பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இது ரஷ்யா – இந்தியா இடையேயான வணிக உறவினை மேம்படுத்தும் என்பதோடு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின் மதிப்பும் மேம்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் எளிதாகும்
இந்தியாவின் இந்த முடிவால் ரஷ்யா மட்டும் அல்ல, தெற்காசிய அண்டை நாடுகாளுடனான வணிகம் எளிதாகலாம். இது நாணயத்தினை சர்வதேசமயமாக்குவதற்கான நீண்டகால இலக்கை அடைய உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி இறக்குமதிக்கு வசதி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தக வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், உலகளவில் ரூபாயின் மதிப்பில் அதிகரித்து வரும் ஆர்வத்தினை ஆதரிற்பதற்காகவும், ரிசர்வ் வங்கியின் முடிவு பெரிதும் கைகொடுக்கும். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என இரண்டிலும் செட்டில் மெண்ட் செய்ய வசதியாக இருக்கும்.
தடை செய்யப்பட்ட நாடுகளுடன் வணிகம்
இது குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக ஈரான் போன்ற நாடுகளுடன் வணிக செய்ய கூடாது என்ற தடையினை அமெரிக்கா, போட்டிருந்த நிலையில், இது ஈரானுடனான வணிகத்தினையும் எளிதாக்கும்.அதோடு ரஷ்யாவுடனான வணிகத்தினையும் எளிதாக்கும்.
Rupee settlement may help india trade with Russia, iran & south asia neighbours
Rupee settlement may help india trade with Russia, iran & south asia neighbours/ரூபாய் வர்த்தகம்.. இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்.. அச்சத்தில் போட்டி நாடுகள்.. ஏன்?