சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்தது.