சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
