தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது பதிவில் அவர், `இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
முன்னதாக இன்றைய தினம்தான் 4ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க நடைபெற்றது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. pic.twitter.com/hsya2yrTgf
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 12, 2022
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM