நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் 8-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 20) என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர் நான் திருநெல்வேலியில் படித்து கொண்டிருந்தேன்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி தினேஷ் வீட்டில் இருந்ததை அறிந்து அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது தினேஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனேஷை கைது செய்தனர்.