குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவசேனா எம்பிக்களின் ஆலோசனையையும், கோரிக்கையையும் ஏற்று இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் இந்த முடிவால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.