தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்றால் கட்டாயம் உற்பத்தி துறையும், ஏற்றுமதியும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உற்பத்தி நிறுவனங்களை மாநில அரசு ஈர்த்து வரும் நிலையில் ஏற்றுமதிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டியது மிகவும் கட்டாயமாகும்.
இதேவேளையில் தமிழ்நாட்டில் தற்போது உற்பத்தித் துறையைச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தாண்டி தென் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும்..?!
2013ஆம் ஆண்டுத் திட்டம்
இதன் அடிப்படையில் தென் தமிழகத்தில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏதுவாக மேம்படுத்தப்பட்ட ஏற்றுமதி தளத்தை அமைக்கும் 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
VO சிதம்பரனார் துறைமுகம்
2013ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் அறிக்கையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி-யில் இருக்கும் VO சிதம்பரனார் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள VO சிதம்பரனார் துறைமுகத்தில் 7,164 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வெளி துறைமுகத் திட்டத்திற்குச் சுவிஸ் டெர்மினல் ஆபரேட்டர் உட்பட ஆறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியது மட்டும் அல்லாமல் EOI விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
VO சிதம்பரனார் துறைமுகம்
இந்த 7,164 கோடி ரூபாய் திட்டம் VO சிதம்பரனார் துறைமுகத்தின் ஏற்றுமதி அளவை அதிகரிக்கும் வகையில் துறைமுகத்தை டிசைன் செய்து, கட்டுமானம் செய்ய, நிதி முதலீடு செய்து, இயக்கி மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு டிரான்ஸ்பர் செய்யும் அமைப்பைக் கொண்டது.
2013 அப்டேட்
2013 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை, ஆண்டுதோறும் 4 மில்லியன் TEUS (இருபது-அடி சமமான அலகு) கையாளும் திறன் கொண்டதாக VO சிதம்பரனார் துறைமுகம் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
6 நிறுவனங்கள் போட்டி
இந்த மாபெரும் திட்டத்திற்கு டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட். சுவிட்சர்லாந்து; International Seaport Dredging சென்னை; மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட், தெலுங்கானா, ஒரிசா ஸ்டீவடோர்ஸ் லிமிடெட், ஒடிசா: பிரிமியம் & ஜேவி பார்ட்னர்கள், UAE மற்றும் அம்மா லைன்ஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் – பிஜேபி
2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு மத்திய பட்ஜெட்டில் 7,500 கோடி செலவில் இத்திட்டத்தை மேம்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்ததும், கேரளாவில் விழிஞ்சத்தில் டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதில் கவனம் திரும்பியது மற்றும் கன்னியாகுமரியில் முனையத்தில் இதேபோன்ற டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகத்தை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த முயற்சியில் மோடி அரசு தோல்வியைச் சந்தித்தது.
வளர்ச்சி
இதேவேளையில் தூத்துக்குடியில் உள்ள VO சிதம்பரனார் துறைமுகத்தில் 2018-19 ஆண்டில் வருடம் 6.92 லட்சம் TEUS அளவிலான சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், 2020-21ல் இதன் அளவு 7.81 லட்சம் TEUS ஆக உயர்ந்தது. இந்த 7,164 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் VO சிதம்பரனார் துறைமுகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும்.
Thoothukudi VOC port’s 2013 outer harbour development Rs 7,164 Cr plan; Swiss to UAE 6 firms submitted EoI
Thoothukudi VOC port’s 2013 outer harbour development Rs 7,164 Cr plan; Swiss to UAE 6 firms submitted EoI தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!