தேசிய சின்னம் அவமதிப்பு : அசோக சின்னத்தில் உள்ள சிங்கத்தை சீண்டியதாக குற்றச்சாட்டு… சிலை திறப்பு விழாவில் நெறிமுறை பின்பற்றப்படவில்லை..

தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது 6.5 மீட்டர் உயரம் உள்ள தேசிய சின்னம் நேற்று நிறுவப்பட்டது.

புதிய சிலை

9500 டன் எடையுள்ள இந்த வெண்கல சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நெறிமுறைப்படி மக்களை சபாநாயகர் தான் இந்த சிலையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜவஹர் சிர்க்கார் தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அசோக சின்னத்தில் உள்ள சிங்கம் சாந்தமாக அதேவேளையில் கம்பீரமாக தோற்றமளிக்கும்.

ஆனால் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கம் ஆக்ரோஷமாக இருப்பது போல் உள்ளது. அதோடு அதன் உருவம் சீராக இல்லாமல் அதிக அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.