கடலூர் மாவட்டம் புவனிகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், வீட்டின் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆனைவாரி என்ற கிராமத்தில் சிதம்பரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க அந்த கார் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை, வீடு ஆகியவற்றின் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சுரேஷ், அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.