தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த லாரி டிரைவர் உறவினருடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
செட்டிமல்லன்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் – கற்பகவல்லி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வேல்முருகன், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்றிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், உறவினர் பிரேம்குமாருடன் இணைந்து, மனைவி கற்பகவல்லியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.