சத்தீஸ்கர் மாநிலம், கான்கெர் மாவட்டத்தில் நதி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்த ஒரு நபரை, எல்லை பாதுகாப்பு படை நீச்சல் வீரர் ஒருவர் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டார்.
நதி பாலத்தின் கீழே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மரக்கட்டையை பிடித்தப்படி அந்த நபர் போராடிக்கொண்டிருந்தார்.
அப்போது உயிரை பொருட்படுத்தாமல் நதி வெள்ளத்தில் குதித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் எஸ்ஐ பிஜு குமார் பின்னர் சக வீரர்களின் உதவியுடன் அந்த நபரை மீட்டார்.