இதுவரையில் நாட்டை இப்படியொரு நிலைமையில் நாம் பார்க்கவில்லை என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. இவர்களிலும் பார்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் வந்தால் எமக்கு சந்தோசம். அவர்களிடம் ஒப்படைத்து பாருங்கள்.
அப்பொழுது தான் உண்மையாக நாட்டை முன்னேற்ற முடியும் என வயோதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது. கோட்டாபய ராஜபக்ச எப்போது வெளியேறுகிறாரோ அப்போது சர்வதேச நாடுகள் உதவும் என மற்றுமொருவர் கூறியுள்ளார்.
மேலும், நாடு தற்போது சீரழிந்து விட்டது. இதுவரையில் நாட்டை இப்படியொரு நிலைமையில் நாம் பார்க்கவில்லை என இன்னுமொரு வயோதிபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.