சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீடு திட்டங்களை நாடு முழுவதும் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் இருந்து பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!
சிட்டி யூனியன் வங்கி
சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதால் இனி மோட்டார், தனிநபர் விபத்து, வீடு மற்றும் பயணம் தொடர்பாக காப்பீட்டு திட்டங்களை சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே எளிதாக பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி
இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ என்.காமகோடி அவர்கள் கூறியபோது, ‘ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டணி நிச்சயமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் அல்லாத சிறந்த காப்பீட்டு திட்டங்களை கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். புதிய கார்ப்பரேட் ஏஜென்சி டை-அப்களுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு விரிவான காப்பீட்டு திட்டங்களை வழங்குவதில் சிட்டி யூனியன் வங்கி எப்போதும் உழைத்து வருகிறது’ என்று கூறினார்.
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ்
இந்த ஒப்பந்தம் குறித்து ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ அனில் குமார் அகர்வால் கூறுகையில், ‘இந்த கூட்டணி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களை வழங்கவும், வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், வங்கியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல், உடனடி மற்றும் தடையற்ற காப்பீட்டு அனுபவத்தை உறுதி செய்வோம்’ என்று கூறினார்.
727 கிளைகள்
சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள 727 சிட்டி யூனியன் வங்கி கிளைகளின் நெட்வொர்க் மூலம் காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும்.
காப்பீடு திட்டங்கள்
இந்த ஒப்பந்தத்தின்படி ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், மோட்டார், தனிப்பட்ட விபத்து, வீடு மற்றும் பயணம் போன்ற தனிப்பட்ட காப்பீட்டு திட்டங்கள், சொத்து மற்றும் பொறியியல் காப்பீடு போன்ற வணிகக் காப்பீட்டுத் திட்டங்களையும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வங்கியால் விநியோகிக்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்படுகிறது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வங்கிகள் பொது காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவற்றிற்கு தலா மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அனுமதித்துள்ளது. சிட்டி யூனியன் வங்கி தற்போது ஸ்ரீராம் இன்சூரன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன் சிட்டி யூனியன் வங்கியானது வாடிக்கையாளர்களை கையாள்வதற்கும், க்ளைம் செட்டில்மென்ட் செய்வதற்கும் பாரத் ரீ இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் என்ற தரகு நிறுவனத்துடன் இணைந்திருந்த நிலையில் தற்போது இந்த இணைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி – ஸ்டார் ஹெல்த்
ஆயுள் காப்பீட்டிற்காக எல்ஐசி உடனும், உடல்நலக் காப்பீட்டிற்காக ஸ்டார்ட் ஹெல்த் உடனும் சிட்டி யூனியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுக் காப்பீட்டிற்காக சிட்டி யூனியன் வங்கி தற்போது ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. விரைவில் ராயல் சுந்தரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The agreement between City Union Bank and Shriram General Insurance to distribute insurance products
The agreement between City Union Bank and Shriram General Insurance to distribute insurance products | நீங்கள் சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!