பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், கோபத்தில் சிறுவனை அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதே சமயம் சிறுவனைத் தாக்கிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராகப் பலர் ட்விட்டரில் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பக்ரீத் தினத்தைப் பற்றி பத்திரிகையாளர் மைரா ஹாஷ்மி என்பவர் சிறப்புச் செய்தித் தொகுப்புக்காக வீடியோ பதிவுசெய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவன் ஒருவன் அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோவின் குறுக்கே வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் மைரா ஹாஷ்மி அந்த சிறுவனைக் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
????????? pic.twitter.com/Vlojdq3bYO
— مومنہ (@ItxMeKarma) July 11, 2022
சிறுவனைத் தாக்கிய பத்திரிகையாளருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர் மைரா ஹாஷ்மி, “அந்த சிறுவன் அங்கிருந்தவரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தான். அதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால்தான் அப்படி நடந்துகொண்டேன்” என ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.