பின்வாசல் வழியாக ஆட்சிபா.ஜ., மீது கார்கே பாய்ச்சல்| Dinamalar

கலபுரகி, : +”நாட்டின் மொத்த எம்.எல்.ஏ.,க்களில், 25 – 30 சதவீதம் பேர் மட்டுமே பா.ஜ.,வை சேர்ந்தவர்கள். ஆனாலும், பின்வாசல் வழியாக வந்து ஆட்சி அமைக்கின்றனர்,” என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:பீஹார், கர்நாடகா, ஆந்திரா, டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி, மஹாராஷ்டிரா என நாட்டின் மொத்த மாநிலங்களில் பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் எத்தனை பேர் உள்ளனர்

என்பதை அந்த கட்சியே கணக்கு போடட்டும்.நாட்டின் மொத்த எம்.எல்.ஏ.,க்களில், 25 – 30 சதவீதம் பேர் மட்டுமே பா.ஜ.,வை சேர்ந்தவர்கள். கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்தனர்.தற்போது கோவாவில் ஆப்பரேஷன் தாமரை செய்ய முயற்சிப்பது, வெட்கக் கேடான விஷயம். பா.ஜ.,வினருக்கு அதிகாரம் பெறுவதே முக்கிய குறிக்கோளாக உள்ளது. காலியாக உள்ள வேலை வாய்ப்புகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராணுவ துறையில் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன.இதுபோன்று, பி.எஸ்.என்.எல்., ரயில்வே, போலீஸ், கல்வி துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. முதலில் அவற்றை நிரப்பி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைகிறது. அபிவிருத்தி குறித்து கேள்வி எழுப்பினால், ஹிந்துத்வா விஷயத்தை கூறி மறைத்து விடுகின்றனர்.ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், இளைஞர்களை ஏவி விட்டு, கடும் பொருளாதார வீழ்ச்சி, பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளனர். இப்போதாவது நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.