ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்காக ஜுலை 9ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சார்பில் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதற்கான காலம் வழங்கப்பட்ட நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு ஏன் 13ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அங்கம் வகிக்காத அரசாங்கமாக இருந்தால் போராட்ட அலை மூலம் பதில் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,