Instant Idli recipes in tamil: தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாகவும் இவை உள்ளது.
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி சுலபமாக தயார் செய்வதற்கு நம்மிடம் ரவை மற்றும் பொரி இருந்தால் போதும்.
இன்ஸ்டன்ட் இட்லி செய்யத் தேவையான பொருட்கள்:-
பொரி – 3 கப்
ரவை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
தயிர்
இட்லி மாவு செய்முறை:
முதலில் மூன்று கப் அளவிற்கு அரிசி பொரியை எடுத்துக் கொள்ளவும். அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த பட்சம் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு ரவையை எடுத்துக் கொள்ளவும். இவற்றையும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் நீங்கள் ஊற வைத்த பொரியை நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் ஊற வைத்துள்ள ரவையையும் சேர்த்து கொள்ளவும். ரவை நீங்கள் சேர்த்த முழு தண்ணீரையும் உரிஞ்சி வைத்திருக்கும்.
இப்போது மிக்ஸியை ஓடவிட்டு, சேர்த்த இரண்டு பொருளையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் உப்பு, தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
நீங்கள் இட்லி தயார் செய்யும் முன்னர், சிறிதளவு ஃபுரூட் சால்ட் மட்டும் சேர்த்து மாவை மிக்ஸ் செய்யவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த இட்லி மாவு தயார். இவற்றை கொண்டு இட்லி ஊற்றலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil