குன்னுர்: குன்னுர் அருகே மின் கம்பத்தில் சிக்கி 30 வயது மதிக்கத்தக்க தந்தத்துடன் கூடிய ஆண் காட்டு யானை உயிரிழந்தது. தனியார் எஸ்டேட் அருகே அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானையுடன், காட்டு பன்றியுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. மேலும் சில வனவிலங்குகள் எதுவும் இறந்துள்ளதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.