தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, வழக்கமான ஆட்சி பணிகளை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) July 12, 2022
இந்த நிலையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற்று, வழக்கமான ஆட்சி பணிகளை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என சமத்துவக் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.