முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கடைசி தேதி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அதிக நபர்கள் ஒரே நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் வாய்ப்பு இருப்பதால் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வருமான வரியை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்யும் போது பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் நிதானமாக செயல்படலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதால் தேவையற்ற கூடுதல் வரி செலுத்துவதை தவிர்ப்பது மட்டுமன்றி நமக்கு கிடைக்கவேண்டிய ரீபண்ட் தொகை விரைவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியது என்ன.. 5 முக்கிய விஷயங்கள் இதோ!

முன்கூட்டியே வருமான வரி தாக்கல்

முன்கூட்டியே வருமான வரி தாக்கல்

இந்த நிலையில் சில காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக நீங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்யும் போது கடைசி தேதியை நெருங்கிவிட்டீர்களா? கடைசி தேதிக்கு அருகில் உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் நடைமுறையில் டென்ஷனை தவிர்க்கவும், உங்கள் வருமான வரி அறிக்கையை முன்கூட்டியே தாக்கல் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் தற்போது பார்ப்போம்.

விரைவான பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை

விரைவான பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தான் வருமான வரித்துறை அலுவலகம் செயல்படுகிறது. உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்தால், இறுதிவரை காத்திருப்பவர்களை விட உங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் முன்னதாகவே செயல்படுத்தப்படும். எனவே உங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

திருத்தம் செய்ய வாய்ப்பு
 

திருத்தம் செய்ய வாய்ப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால், அதை கண்டுபிடிக்கும் சூழ்நிலையில் இருந்தால் டென்ஷன் இல்லாமல் தவறை சரிசெய்து கொள்ளலாம். தவறுகளை சரிசெய்ய உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். மேலும் உங்கள் வருமான வரி அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கு வருமான வரித்துறை உங்களுக்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. எனவே கடைசி தேதிக்கு முன்கூட்டியே வருமானத்தை தாக்கல் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சட்டரீதியான விளைவுகளை தவிர்க்கலாம்

சட்டரீதியான விளைவுகளை தவிர்க்கலாம்

நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கை உரிய தேதிக்குப் பிறகு தாக்கல் செய்வது அல்லது அதைத் தாக்கல் செய்யாமல் இருப்பது சட்டரீதியான தாக்கங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். நிலுவைத் தேதிக்குப் பிறகு உங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்தால், தாமதமாகத் தாக்கல் செய்வதற்கு 234A வட்டியை மாதத்திற்கு 1% அல்லது தாக்கல் செய்யாததற்கான அபராதம் உட்பட செலுத்த வேண்டிய வரித் தொகையின் ஒரு பகுதியைச் செலுத்த வேண்டும்.

வரித்துறை இணையதளம்

வரித்துறை இணையதளம்

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய முயற்சிக்கும் போது, ​​வருமான வரித்துறை இணையதளம் செயலிழக்கக்கூடும். இது கடைசி நேரத்தில் தாக்கல் செய்யும்போது அதிகளவில் ஏற்படும். எனவே, மற்றவர்களை விட முன்னதாக தாக்கல் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை நீங்கள் தவிர்த்து கொள்ளலாம்.

மேலும் சில நன்மைகள்

மேலும் சில நன்மைகள்

நீங்கள் கடன் அல்லது விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, ​​ வருமான வரி ரிட்டன் அவசியம். உங்கள் கடன் அல்லது விசா பரிசீலனையின்போது உங்கள் நிதி நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு வருமான வரி தாக்கல் முக்கிய ஆவணமாகும். உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் எந்தவித டென்ஷனும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

கடைசி தேதி

கடைசி தேதி

வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். எனவே கால நீட்டிப்பு கிடைக்கும் என காத்திராமல் உடனே வருமான வரியை தாக்கல் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are the Benefits of early income tax filing..!

What are the Benefits of early income tax filing..! | முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

Story first published: Tuesday, July 12, 2022, 11:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.