வீடு புகுந்து கடத்தப்பட்ட கனேடிய பெண் வழக்கில் முக்கிய திருப்பம்: வெளியான பின்னணி


கனடாவின் ஒன்ராறியோவில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் தொடர்பில் 35 வயதான கியூபெக் நபர் மீது வழக்கு பதிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடாவில் வசாகா கடற்கரை பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட 37 வயது Elnaz Hajtamiri தொடர்பில் முக்கிய தகவலை ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 12ம் திகதி நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில், இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வந்துள்ளனர்.
பொலிஸ் உடையில் வீடு புகுந்த மூவர் கும்பல் Elnaz Hajtamiri-வை மிரட்டி வாகனம் ஒன்றில் கடத்தி சென்றுள்ளது.

விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் அந்த கும்பலானது வெள்ளை நிற Lexus RX SUV வாகனத்தில் கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி டிசம்பர் 2021ல் Elnaz Hajtamiri-வை தாக்கி கடந்த முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் இருவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் பொலிசார் வழக்கு பதிந்திருந்தனர்.

வீடு புகுந்து கடத்தப்பட்ட கனேடிய பெண் வழக்கில் முக்கிய திருப்பம்: வெளியான பின்னணி | Wasaga Beach Abduction Quebec Man Charged

அச்சம்பவத்தில் Elnaz Hajtamiri காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில வாரங்களில், ஜனவரி மாதம் வசாகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து வலுக்கட்டாயமாக Elnaz Hajtamiri கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த வழக்கில் கியூபெக்கின் Brossard பகுதியைச் சேர்ந்த 35 வயதான Mohamad Lilo கைது செய்யப்பட்டு கடத்தல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும், கொலை முயற்சி, கடத்தல் முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும் அவர் மீது வழக்கு பதிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட Elnaz Hajtamiri தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.