சமீபத்தில் இந்திய ஸ்னாக்ஸ்களுக்கு போட்டியாக அண்டை நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், பல பிராண்டுகளை அண்டை நாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தி வருவதாகவும் ஆய்வறிக்கை ஒன்று கூறியது.
டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?
ஆனால் என்னதான் மேலை நாட்டு ஸ்னாக்ஸ்கள் வந்தாலும், என்றுமே நம்மூர் தின்பண்டங்களுக்கு என்றுமே ஈடாகாது. நம்மவரின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது என்பதை நிரூபிக்கும் விதமாக பாட்டீல் காக்கி வளர்ச்சி கண்டுள்ளது.
பாட்டீல் காக்கி தொடக்கம்
மும்பை மற்றும் புனே முழுவதும் மகாராஷ்டிரா உணவுகளை விற்பதற்காக பாட்டீல் காக்கியை தொடங்கினார். ஆரம்பத்தில் தனது குடும்பத்தினை ஆதரிக்கும் விதமாக தொடங்கினார். ஆனால் இன்று ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ஆர்டர்களை விற்பனை செய்து வருகின்றார். இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானமும் ஈட்டி வருகின்றார்.
வித்தியாசமான உணவு
வினித் பாட்டீல் தனது பள்ளியில் படிக்கும்போது, அவருடைய தாயார் கீதா பாட்டீல் செய்து கொடுக்கும் தின்பண்டங்கள் மிகுந்த சுவையான ஒன்றாக இருந்தது. இது அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்ததாகவும் நினைவு கூறும் வினித், என் நண்பர்கள் மதிய உணவிற்காக வழக்காமாக ரொட்டி அல்லது சப்ஜியை கொண்டு வருவார்கள். ஆனால் எனது மதிய உணவு புதுமையான ஒன்றாக இருக்கும். காய்கறிகளை பூரணமாக செய்து அதனை பராத்தா மாவில் வைத்து வித்தியாசமாக சமைப்பார்கள். இது சமோசா வடிவில் இருக்கும்.
விதவிதமான உணவு
மொத்தத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வித விதமாக கொண்டு வருவேன். நான் எதையேனும் சாப்பிடும் முன்பே என் நண்பர்கள் எனது டிபனை காலி செய்து விடுவார்கள்.
கீதாவுக்கு வீட்டில் விதவிதமான சுவையான உணவுகளை தயாரிப்பது, அதனை வியாபாரம் செய்வது போன்றவற்றில் ஆர்வம் அதிகம்
கீதாவின் தாயார் உணவு
ஏனெனில் கீதா சிறுவயதில் இருந்தே தனது தாயார் தினசரி 20 பேருக்கு சமைத்து கொடுத்து வந்ததை பார்த்து வளர்ந்துள்ளார். அப்போதே எனது தாயாருக்கு அடிக்கடி சமைப்பதில் உதவியாக இருப்பேன் என கீதா தி பெட்டர் இந்தியாவிடம் கூறியுள்ளார். மேலும் அடுப்புக்கு அருகில் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, பானையில் எனது தாயார் கிளறுவதை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என மலரும் நினைவுகளை பகிர்கிறார்.
சிறியளவில் தொடக்கம்
இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தான், கடந்த 2016ல் மகாராஷ்டிராவில் பாரம்பரிய தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளை விற்பனை செய்வதற்காக வீட்டில் இருந்து ஒரு சிறிய வணிகத்தினை தொடங்கினார். இதில் மோடக், பூரன்பொலி, சக்லி, போஹா மற்றும் சிவ்டா ஆகியவையும் அடங்கும்.
ரூ.1 கோடிக்கு மேல் வருவாய்
ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய வணிகம், இன்று 3,000 பேருக்கும் மேலாக சேவை செய்து வருகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகின்றது.
மும்பையிலேயே பிறந்து வளர்ந்த கீதா, இங்கேயே திருமணமும் முடிந்ததால் அவரது வணிகத்தினை தொடர்வதற்கும் ஏதுவாக இருந்தது. கூடவே தனது தாயின் ஆர்வமும் தனக்கு ஒரு வணிகத்தினை தொடங்க ஒரு உத்வேகத்தினை அளித்தது என கூறுகிறார்.
வணிகம் செய்ய முடிவு
கீதாவின் கணவர் பல் மருத்துவ கூடத்தில் எழுத்தாளராக வேலை செய்து வந்தார். இரண்டு பசங்களை கொண்டிருந்த எங்களுக்கு, ஒரு வீடும் இருந்தது. இதுவே ஆரம்பத்தில் வணிகம் தொடங்குவதற்கு மிக எளிதாக அமைந்தது. கூடவே குடும்பத்தையும் நடத்த முடியும் என்ற நிலையால் இந்த வணிகத்தினை செய்ய முடிவெடுத்தேன்.
சிறிய அளவில் தொடக்கம்
எல்லாவற்றுக்கும் மேலாக எங்களிடம் ஏற்கனவே நிறுவப்பட்ட வாடிக்கையாளர்கள் தளம் இருப்பதால், அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்கு சமையல் திறமையும் இருந்தது. அதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
செலவுகள் அதிகரிப்பு
இதற்கிடையில் எங்களது மகன்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இதுவே என்னை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலைக்கு உத்வேகத்தினை அளித்தது. இந்த நிலையில் தன் என் சமையலறையில் இருந்து சிறிய அளவில் வணிகத்தினை செய்ய தொடங்கினேன்.
என்ன வருமானம்?
கடந்த 2016 முதல் 2020 வரையில் வீட்டில் இருந்த கிட்சனிலேயே செய்து வந்த வணிகத்தினை, சரியான பிராண்டிங்கும் இல்லாமல் விற்பனை செய்து வந்தோம். எவ்வளவு சம்பாதித்தோம் என்பதும் எனக்கு தெரியவில்லை. எனினும் குடும்பம் நடத்த போதுமானதாக சம்பாதித்தேன். ஒரு வேளை மாதத்திற்கு ஒரு லட்சம் செய்திருக்கலாம், எனினும் என்னால் அதனை உறுதியாக சொல்ல முடியவில்லை.
அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்த வணிகம்
இப்படி ஒரு நிலையில் தான் 2021ம் ஆண்டில் வினித் வணிகத்தில் நுழைந்துள்ளார். பிராண்டிங் மற்றும் மார்கெட்டிங் பற்றி தெரிந்து கொண்டு, அதனை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பியுள்ளார். இதற்கு முன்பு எனது தாயார் பட்ட கஷ்டத்தினை பார்த்துள்ளேன். இதற்கிடையில் தான் பாட்டீல் காக்கி என்ற பெயரை கொண்டு வந்தோம். மேலும் வணிகத்தினை விரிவுபடுத்தவும், அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தொடங்கினோம்.
எவ்வளவு வருமானம் தெரியுமா?
ஆண்டுக்கு 12 லட்சம் வருவாய் என்ற நிலையில் இருந்து, கிட்டத்தட்ட 1.4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். தற்போது 1200 சதுர அடியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளோம். எங்களுடன் 25 பெண்களும் பணிமனையில் பணிபுரிகின்றனர். பல பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது மனதுக்கு மன நிறைவாக உள்ளது, குறிப்பாக கொரோனா காலத்தில் கண்வன் வேலையிழந்த பெண்களுக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனை செய்து வரும் பிராண்டுகளை, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் கீதா கூறுகின்றார்.
கீதாவின் இந்த தளராத நம்பிக்கை, தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள பெண்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகம் தான்.
inspired by her Mother: Geetha from Maharashtra earns crores through her own business
inspired by her Mother: Geetha from Maharashtra earns crores through her own business/அம்மாதான் குரு.. ரூ.1.4 கோடி வருமானம் ஈட்டும் கீதா.. 48 வயதில் தளராத நம்பிக்கை!