புதுடில்லி :’ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பயணியர் விமானம் ஒன்று மங்களூரிலிருந்து துபாய் சென்றது. வழக்கம் போல பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
அதில், விமானத்தின் முன் டயரில் கோளாறு இருப்பது தெரியவந்ததது. இதையடுத்து விமானம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:விமானத்தின் முன் டயரில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து, அதை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானம் துபாயிலிருந்து மதுரை திரும்ப வேண்டும். கோளாறு காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதால், மும்பையில் இருந்து வேறு ஒரு விமானத்தை துபாய்க்கு அனுப்பினோம். அந்த விமானம் துபாயில் இருந்து மதுரைக்கு பயணியரை அழைத்து வந்தது. இதனால் விமானப் பயணம் தாமதமானது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 நாட்களில், ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஒன்பது முறை இது போன்ற சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இது பற்றி விளக்கம் அளிக்கும்படி இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement