சேலம்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டியுள்ளது. இது நடப்பாண்டின் முதல் தடவை என்று, இதுவரையில் 68வது முறையாக 100 அடியை எட்டி இருப்பதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. முக்கியமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் அணைகளான கே.ஆர்.எஸ், மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதனலால், பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியில் இருந்து 1,10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்திருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உள்ளது.
இதனால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. அதனால், அங்கு குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதுபோல, தண்ணீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 68 வது ஆண்டாக 100 அடியை மேட்டூர் அணை எட்டியுள்ளது. அணையின் செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் மதுசூதனன் தெரிவித்து உள்ளனர். அவர்கள் காவிரி நீரை மலர்தூவி வரவேற்றனர்.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.